குவாந்தன்,அக்டோபர் 02-
நாடாளுமன்ற மக்களவைக்கூட்டத் தொடர், வரும் அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்குகிறது. 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு வழிவிடும் வகையில் மக்களவைக்கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர விரும்புகின்ற எம்.பி.க்கள், அதற்கான பரிந்துரையை சமர்ப்பிக்கலாம் என்று சபா நாயகர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்து அறிவித்துள்ளார்.
எனினும் அந்த தீர்மானத்தை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் தங்களைப் பொறுத்தது என்று சபா நாயகர் குறிப்பிட்டுள்ளார்.