கடும் நடவடிக்கை எடுக்குமாறு வீரப்பன் உத்தரவு

நெகிரி செம்பிலான் , அக்டோபர் 03-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆறுகளில் நிகழும் நீர் மாசுபாட்டிற்கு காரணமாக இருக்கின்ற தரப்பினர், அடையாளம் காணப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில சுற்றுச்சூழல் துறையை ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

சுற்றுச்சூழல் துறை நிர்ணயத்துள்ள விதிமுறைகளை மீறும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதிலும், ஆற்று நீர் மாசுப்பட்டிற்கு காரணமாக இருக்கின்ற செயல்களை தடுப்பதற்கும் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில தொழில்முறைவர், மனித வளம், பருவநிலை மாற்றம், கூட்டறவு, மற்றும் பயனீட்டாளர் விவகாரப்பிரிவு ஆடசிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

காரணம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆற்று நீர் மாசுப்பட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்..

கடந்த செப்டம்பர் 29 ஆம் சிரம்பான், ஜாலான் சுங்கை லண்டக், சுங்கை பரோய் ஆற்றில் மீன்கள் / குவியல், குவிலாக இறந்துக் கிடப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகார் அடிப்படையில் நெகிரி செம்பிலான் சுற்றுச்சூழல் இலாகாவின் விசாரணைக்குழு ஒன்று, சம்பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டதாக வீரப்பன் தெரிவித்தார்.

அந்த ஆற்று நீர் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதுடன் சுற்றுச்சூழல் இலாகா மேற்கொண்ட ஆய்வில் பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை அரைக்கும் நடவடிக்கைகள் கொண்ட வளாகம் ஒன்று, அப்பகுதியில் எவ்வித அனுமதியின்றி செயல்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உரிய நடவடிக்கைக்காக இவ்விவகாரம் தற்போது சிரம்பான் மாநகர் மன்றம், தேசிய திடக்கழிவு நிர்வாக இலாகா, சிரம்பான் மாவட்ட நில அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வீரப்பன் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS