பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 03-
சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து பினாங்கை நோக்கி புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸின் துணை விமான நிறுவனமான Firefly விமானம் ஒன்று, கேபினில் திடீரென்று ஏற்பட்ட புகையைத் தொடர்ந்து அந்த விமானம் சுபாங்கிற்கே மீண்டும் திரும்பியது.
9M-FYG என்ற பதிவு எண்ணைக்கொண்ட அந்த பயணிகள் விமானம், பினாங்கு வான்போக்குவரத்து பாதையின் மையப்புள்ளியான கபார், வான் போக்குவரத்து பாதையில் தனது வேகத்தை அதிகரிக்கத்தொடங்கிய போது, விமானிகளின் கேபின் அறையில் திடீரென்று புகை கிளம்பியதாக கூறப்படுகிறது.
பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த விமானத்தை சுபாங்கிற்கே திருப்புவது என்று முடிவு செய்த விமானி, விமானம் புறப்பட்ட 15 நிமிடத்திலேயே சுபாங்கிற்கே திருப்பியுள்ளார்.
விமானம், கபார் வான்போக்குவரத்துப் பாதையிலிருந்து சுபாங்கிற்கு திரும்புவதை விமான வழித்தடங்களை துல்லிமாக காட்டும் Flightradar 24 அகப்பக்கத்தில் தெரியவந்துள்ளது.