பட்டர்வொர்த்,அக்டோபர் 03-
பினாங்கு மாநிலத்தின் நில அடையாளத்தை தாங்கிய நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டுடன் தனது சேவையை நிறுத்திக்கொண்ட பினாங்கு Feri- களில் ஒன்றுக்கு, மீண்டும் புத்துயிர் அளிக்கப்பட்டு, தொல்பொருள்சாலை காட்சியகமாக கடலில் மிதக்கப்படவிருக்கிறது.
இந்த முயற்சியானது, பினாங்கிற்கு சுற்றுப்பயணிகளை கவர்வது மட்டுமல்லாமல், பினாங்கு பாலம் கட்டப்படுதற்கு முன்னதாக பினாங்கு தீவையும், பெருநிலத்தையும் இணைப்பதற்கு குட்டித் தூதுவர்களைப் போல் மக்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வந்த Feri- யின் ஒரு நூற்றாண்டு கால அர்ப்பணிப்பை இளைய தலைமுறையினரிடம் நினைவுகூரப்படுவதற்கு அதனை காட்சியகப்படுத்தப்படவிருக்கிறது.
ஆசியாவில் கடலில் மிதக்கப்படவிருக்கும் முதலாவது தொல்பொருள் காட்சி சாலையாக பினாங்கு Feri- விளங்கவிருக்கிறது.
