குவாந்தன்,அக்டோபர் 03-
பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷா சுல்தான் அப்துல்லா-வின் அரச திருமணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றதாக கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதியிலிருந்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தியை பகாங் அரண்மனை மறுத்துள்ளது.
தெங்கு மஹ்கோடா பகாங், தெங்கு ஹசனல் , ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதைப்போல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் – மில் பொய்யான செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த தகவல், ஃபரிதா என்ற ஒரு பெண்ணின் பெயரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த செய்தியை நம்ப வேண்டாம் என்று பொது மக்களை பகாங் அரண்மனை கேட்டுக்கொண்டுள்ளது