மலாக்கா,அக்டோபர் 03-
ஜாகிங்- கில் ஈடுபடுவதற்காக வெளியே சென்ற போது, இரண்டு வங்காளதேச ஆடவர்களால் கடத்தப்பட்டதாக நம்பப்படும் ஓர் இந்தியப் பெண், மலாக்கா, அயர் கெரோஹ், தமன் தாசிக் உதமா-வில் உள்ள வங்காளதேசத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வீட்டின் அறையில் சுயநினைவு இழந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டார்.
கைப்பேசி சார்ஜர் ஒயர்களினால், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்பட்டும் ஒரு மாற்றத் திறனாளியான 22 வயதுடைய அந்த இந்தியப் பெண், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களால் மீட்கப்பட்டார்.
அந்தப பெண்ணை கடத்திச் சென்றதாக நம்பப்படும் இரு வங்காளதேசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா மாவட்ட போலீஸ் தலைவர் Chiristopher Patit தெரிவித்தார்.
அந்தப் பெண் தற்போது மலாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மெது நடையில் ஈடுபடப் போவதாக கூறி மாலை நேரத்தில் வெளியே சென்ற அந்தப் பெண், வெகுநேரமாகியும் வீடு திரும்பாததைத்கண்ட அவரின் குடும்ப உறுப்பினர்கள், அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் அவரைத் தேட தொடங்கி இருக்கின்றனர்.
அப்போது வீட்டின் பின்னால் தங்கியிருந்த வங்காளதேசத் தொழிலாளர்களின் குடியிருப்பில் அந்தப் பெண், அடித்து துன்புறுத்தப்பட்டு கிடந்ததைத் கண்டு அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியதாக Chiristopher Patit குறிப்பிட்டார்.
முன்னதாக, வீட்டின் பின்புறம் சென்ற அந்தப் பெண்ணை, பின்புற குடியிருப்பில் உள்ள 20 மற்றும் 30 வயதுடைய இரு வங்காளதேசிகள் அவரை கையைப்பிடித்து, தங்கள் வீட்டிற்குள் இழுத்துச் சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அந்நிய நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் ஓர் அறையிலிருந்து அந்தப் பெண், குடும்ப உறுப்பினர்களால் மீட்கப்பட்ட போது தலையில் காயங்கள் தென்பட்ட வேளையில் அவரின் கைகால்கள் கைப்பேசி சார்ஜர் ஒயரினால் கட்டப்பட்டு, சுயநினைவு இழந்த நிலையில் கிடந்துள்ளார் என்று Chiristopher Patit தெரிவித்தார்.
அந்தப் பெண்ணை தாக்குவதற்கு வங்காளதேசிகள் பயன்படுத்தி இருக்கலாம் என்று நம்ப்படும் ஒரு சுத்தியல் மற்றும் கைப்பேசி சார்ஜர் ஒயர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
ரகசிய கேமராக்கள் எதுவும் அந்தப்பகுதியில் காணப்படாததால் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் யாராவது இருப்பினும் அவர்களை கொண்டு விசாரணை முடக்கிவிட்ப்பட்டுளள்தாக Chiristopher Patit குறிப்பிட்டார்.
மலாக்கா, பத்து பெரெண்டாம்– மில் நேற்று பிடிபட்டுள்ள அந்த இரு வங்காளதேசிகள், தற்போது தடுத்து வைக்கப்பட்டு குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.