கோலாலம்பூர், அக்டோபர் 04-
சுயசேவை சலவை மையங்கள் மற்றும் அரசாங்க, / தனியார் துறை பணியிட கட்டிடங்களில் புகைப்பிடிப்பதற்கு முற்றாக தடைவிதிக்கப்படுகிறது. இந்த புதிய விதிமுறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ Dzulkefly அகமது அறிவித்துள்ளார்.
பொது சுகாதாரத்தை கருத்தில் கொண்டு 2024 ஆம் ஆண்டு புகையிலை கட்டுப்பாட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் 28 வகையான பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளாக அரசு பதிவேட்டில் இடம் பெறச்செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பட்டியலில் கூடுதல் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை சலவை சுய சேவை கட்டிடங்கள் மற்றும் அரசாங்க, தனியார் துறை பணியிடங்களாகும் என்று அமைச்சர் விளக்கினார்.
அவ்விடங்களுக்கு அப்பாற்பட்டு, கேளிக்கை மையங்கள், திரையரங்குகள், கிளினிக்குகள், லிப்டு, மருத்துவமனை, கிளினிக்குகள் பொது கழிப்பறைகள், உணவகங்கள் மற்றும் குளிர்சாதனக் கடைகள் ஆகியவை சிகரெட் புகைப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளாக பிரகடன்படுத்ப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.