சுங்கை சிப்புட் ஈவூட் தமிழ்ப்பள்ளி திறப்பு விழா

பேராக், அக்டோபர் 04-

வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஒரு கோடியே 30 லட்சம் வெள்ளி செலவிலான பேரா, சுங்கை சிப்புட், ஈவூட் தமிழ்ப்பள்ளியை அதிகாரபூர்வ திறப்பு விழா காணவிருக்கிறது.

இப்புதிய பள்ளியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்த ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகளில் இறுதியானதாக இப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது சுங்கை சிப்புட் ஈவுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளி வாரியத்தின் தலைவரான தியகராஜான் கூறுகையில், பேராக் மாநிலத்திலேயே கப்பெரிய தமிழ்ப்பள்ளியாக உருவெடுத்துள்ள இப்பள்ளி சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒன்றாகும். இது பிரதமரால் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்படுவது பெருமைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS