வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஆயிரம் வெள்ளி நிதி உதவி

பாயா ஜாரஸ், ​​அக்டோபர் 04-

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு
அவசரகால உதவி நிதியாக தலா 1,000 வெள்ளி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரை எதிர்நோக்கியுள்ளவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இந்த நிதியுதவித் திட்டத்தை பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம் ஒருங்கிணைக்கும் என்று பேரிடர் மேலாண்மைத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் Najwan Halimi கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூரில் நாம் சிறப்புத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இந்த உதவித் நிதியைப் பெறுவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்டவர்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்களைப் பதிந்து கொள்வது அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS