பிடிபட்ட நபர்களில் ஒருவன், கொலை விசாரணையில் சம்பந்தப்பட்டவன்

கிள்ளான்,அக்டோபர் 07-

கிள்ளான், பண்டமாரானில் உள்ள ஓர் இந்திய வீட்டில் நடத்தப்பட்ட ஆயுதமேந்திய துணி கொள்ளை சம்பவத்தில் பிடிபட்ட 10 கொள்ளையர்களின் ஒருவன் கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பில் ஏற்கனவே போலீஸ் விசாரணைக்கு ஆளாகியவன் என்று சிலாங்வர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

அவனுடன் சேர்ந்து பிடிபட்ட மற்றொரு கொள்ளையன் வீடு புகுந்து நிகழ்த்திய ஆயுதமேந்திய கொள்ளை தொடர்பில் மொத்தம் 13 சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளான் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கொள்கைக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மேலும் இரண்டு முதல் நான்கு நபர்கள் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாக டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்தார்.

இன்னும் பிடிபடாமல் இருக்கும் அவர்களை பிடிப்பதற்கு தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டு இருப்பதையும் இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS