விடுமுறையை மாற்றியதில் தமக்கு உடன்பாடுயில்லையாம்

ஜொகூர் , அக்டோபர் 08-

ஜோகூர் மாநிலத்தில் வார இறுதி விடுமுறை நாட்கள் மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டதில் தமக்கு உடன்பாடுயில்லை என்று ஜோகூர், பாசிர் குடாங் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் தெரிவித்துள்ளார்.

ஜோகூர் மாநிலத்தின் வார இறுதிவிடுமுறை என்பது, மாநிலத்தின் வரலாறு மற்றும் கலாச்சார ரீதியாக பொருள் பதித்ததாகும் என்று ஒரு சட்ட வல்லுநரான ஹசன் அப்துல் கரீம் கூறினார். ஜோகூர் மாநிலம் தற்போது அனுசரித்து வருகின்ற வெள்ளி, சனிக்கிழமை வார இறுதி விடுமுறையை தொடர்ந்து அனுசரிப்பதால் ஜோகூர் மாநிலம், முன்னேற்றமின்றி பின்தங்கி விடாது என்று ஹசன் அப்துல் கரீம் வாதிட்டார்.

ஜோகூர் மாநிலம், பூவியியல் ரீதியாக இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வளர்ச்சி நிறைந்த மாநிலமாகும். இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஜோகூர் எப்போதுமே தனித்துவம் நிறைந்த மாநிலமாகும்.

வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்பது மிகுந்த உன்னத நாளாகும். புனித்தன்மை நிறைந்த கிழமையாகும் என்று ஹசன் அப்துல் கரீம் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS