கேமரன்மலை கடை வாடகை திடீர் உயர்வா? விசாரணை நடத்தப்படும்

குவாந்தன்,அக்டோபர் 08-

நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான கேமரன்மலையில் மேடன் அக்ரோ பகுதியில் உள்ள கடைகளின் வாடகை, 7,500 வெள்ளி வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்படும் புகார் தொடர்பில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பகாங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிம் சோன் சியாங் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் தாமும் நிறைய புகார்களை கடந்த வாரம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வணிகர்களிடம் தாங்கள் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கடையின் வாடகையும் 500 வெள்ளியிலிருந்து 5 ஆயிரம் வெள்ளி வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக வணிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்று அவர் விவரித்தார்.

தற்போது வியாபாரம் செய்து வரும் வணிகர்களை விரட்டும் நோக்கில் கேமரன்மலை மாவட்ட ஊராட்சி மன்றம் வேண்டுமென்றே கடை வாடகையை உயர்த்தியுள்ளதாக காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத் தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS