கோலாலம்பூர், அக்டோபர் 08-
மஇகாவின் தேசியப் பொருளாளரும், பேரா மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவருமான தொழிலதிபர் டான்ஸ்ரீ எம். இராமசாமி, மஇகாவின் உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில் சமூக சேவகரும், சிகாம்புட் மஇகா தொகுதி தலைவருமான டத்தோ என். சிவகுமார் மஇகாவின் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு முக்கியத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் செய்துள்ள அறிவிப்பில் கட்சியின் பொதுச் செயலாளரகா டத்தோ எஸ். ஆனந்தன் நியமிக்கப்பட்ட வேளையில் கட்சியின் நிர்வாகச் செயலாளராக டத்தோ AT குமரராஜா நியமிக்கப்பட்டார்.