அக்டோபர் 08-
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இருவருமே ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, இருவருக்கும் விவாகரத்துக்கு உடன்பாடு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் காதலித்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்ற நிலையில், திடீரென 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு முடிவு செய்தனர். இதனை தங்களது சமூக வலைதளத்தில் உறுதி செய்த நிலையில், இருவருக்கும் இடையே சுமுக பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பு வீட்டிலிருந்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் முறைப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இந்த வழக்கை அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அக்டோபர் 19 ஆம் தேதி இருவரும் ஆஜராகவில்லை என்றால், இருவருக்கும் பிரிய மனம் இல்லையா என்ற கேள்வி எழும் என்று கூறப்படுகிறது.