7 வீரர்கள் இந்திய அணியில் அறிமுகம்.. தன் பேச்சை தானே கேட்காத பிசிசிஐ.. ஐபிஎல் தொடரின் ஆதிக்கம்

அக்டோபர் 08-

மும்பை: 2024ம் ஆண்டில் மட்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஏழு வீரர்கள் இந்திய டி20 அணியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இந்திய டி20 அணியில் ஐபிஎல் தொடரின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடுவதி வைத்து மட்டுமே ஒரு வீரரை இந்திய அணியில் தேர்வு செய்ய மாட்டோம் என பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் தேர்வு குழுவினர் அறிவித்திருந்தனர்.

னால், அதற்கு நேர் மாறாக கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ரசிகர்களின் ஆதரவை பெறும் சிறந்த வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏழு வீரர்கள் இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார், யார்? என்று பார்க்கலாம்.

அபிஷேக் சர்மா 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்று இருந்தார். அபிஷேக் ஷர்மா துவக்க வீரராக அதிரடியாக ஆடி இருந்தார். அவர் 2024 ஜூலை மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார்.

ரியான் பராக் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் 2024 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ரன் குவித்தார். இதை அடுத்து அவருக்கு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் முதன் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. துருவ் ஜுரல் துருவ் ஜுரல் முன்னதாக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தார். அவர் 2024 ஐபிஎல் தொடரில் சராசரியாக செயல்பட்ட போதும், அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்பட்டு இருக்கிறது. அவரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது அறிமுகத்தை பெற்றார்.

WATCH OUR LATEST NEWS