போர்ட் டிக்சன்,அக்டோபர் 08-
ஆதரவற்ற சிறுவன் ஒருவன் உடலில் காயங்களுடன் ஆடையின்றி ஒரு வீட்டின் அறையில் இருந்து வந்தது அம்பலமாகியுள்ளது..
தனது வளர்ப்புத் தந்தையால் கடும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கலாம் என்று நம்பப்படும் ஆறு வயதுடைய அந்த சிறுவன் நேற்று போர்ட்டிக்சன், பத்து 4 டில் உள்ள ஒரு வீட்டிலிருந்து போலீசாரால் மீட்கப்பட்டுள்ளான்.
இதற்கு முன்பு, அந்த சிறுவனை பராமரித்து வந்த 67 வயது மூதாட்டி ஒருவர், அந்த சிறுவனுக்கு ஏதாவது நடந்து இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் அவனை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். எனினும் சிறுவனை கண்டுப்பிடிப்பதில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து போலீசாரின் உதவியை நாடியுள்ளார்..
இதன் தொடர்பில் போர்ட்டிக்சன், தமன் தேச ருசா மற்றும் Raman Dataran Segar, Likut ஆகிய இடங்களில் இரு ஆடவர்களையும், ஒரு பெண்ணையும் போலீசார் கைது செய்ததுடன் வீட்டின் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த சிறுவனை மீட்டுள்ளனர்.