கோலாலம்பூர், அக்டோபர் 08-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், நேற்று செர்டாங்கில் உள்ள சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நல பரிசோதனை நடத்தப்பட்டது.
சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஃபரிக் ரிசல் அப்துல் ஹமீத், வெளியிட்ட ஓர் அறிக்கையில், டாக்டர் வான் அசிசா, உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஆனால் இன்னமும் மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்..
இதற்கிடையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்றிரவு தமது முகநூல் பதிவில், தனது மனைவி டாக்டர் வான் அசிசா, விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு மலேசியர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.