வாகனம் சாலையை விட்டு விலகி விபத்து, ஆடவர் பலி

லுமுட் , அக்டோபர் 08-

வாகனம் ஒன்று சாலையைவிட்டு விலகி, அருகில் உள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் பாய்ந்து தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று மாலை 4.35 மணியளவில் மேற்கு கரை நெடுஞ்சாலையான Lebuhraya WCE- யின் 211.8 ஆவது கிலோமீட்டரில் பேரா, சித்தியாவான் அருகில் நிகழ்ந்தது.

தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அநத் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS