கோலாலம்பூர், அக்டோபர் 08-
மலேசியாவின் செம்பனை எண்ணெய் இறக்குமதி விநியோகத்தை நிறுத்தியிருக்கும் இந்தியாவின் பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கை தற்காலிகமானதே என்று தோட்டம் மற்றும் மூலப்பொருள் துறை அமைச்சர் ஜோஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.
செம்பனை எண்ணெய் இறக்குமதி வரியை இந்தியா அண்மையில் உயர்த்தியதைத் தொடர்ந்து அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், மலேசியாவிடமிருந்து ஒரு லட்சம் டன் எடைகொண்ட செம்பனை எண்ணெய் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இருக்கும் என்று தாம் நம்புவதாக Johari தெரிவித்தார்.