புத்ராஜெயா,அக்டோபர் 09-
முட்டைக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை நிறுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்யக்கூடும் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு இன்று கோடி காட்டியுள்ளார்.
A,B,C வகையைச் சேர்ந்த முட்டை விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பி, சீரான நிலையில் இருக்கும் என்றால் முட்டைக்கு அரசாங்கம் வழங்கி வருகின்ற உதவித் தொகை நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
புத்ராஜெயாவில் இன்று விவசாயம் மற்றும் உணவுபாதுகாப்புத்துறை அமைச்சின் மாதாந்திர பேரணியில் உரையாற்றுகையில் முகமட் சாபு இதனை தெரிவித்தார்.