IPL 2025: ஆர்சிபியிலிருந்து விலகி பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேரும் முக்கிய வீரர் யார்? அதற்கான காரணம் என்ன?

09 அக்டோபர் 2024

IPL 2025, Faf du Plessis: கரீபியன் பிரீமியர் லீக்கில் செயிண்ட் லூசியா கிங்ஸை சாம்பியன் பட்டம் வென்று அழைத்துச் சென்ற ஃபாஃப் டூ பிளெசிஸ், ஐபிஎல் 2025ல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை அணியான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியானது 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டிராபியை கைப்பற்றி சாதனை படைத்தது. ப்ரீத்தி ஜிந்தாவின் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் கேப்டனான ஃபாப் டூ ப்ளெசிஸ் முதல் முறையாக லூசியா கிங்ஸ் அணிக்கு டிராபி வென்று கொடுத்துள்ளார்.

ஆனால், இதுவரையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு கேப்டனாக இருந்த ஃபாப் ஒரு முறை கூட டிராபி கைப்பற்றி கொடுக்கவில்லை. ஏற்கனவே ஆர்சிபி அணியிலிருந்து ஃபாப் டூ ப்ளெசிஸ் விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இது நல்லதா போச்சு என்று நினைத்துக் கொண்டு ஃபாப் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றது. அந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியில் கேப்டனாக இடம் பெற்றிருந்த பேட் கம்மின்ஸ் அந்த அணிக்கு டிராபி வென்று கொடுத்தார். இதன் மூலமாக 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது.

இதையடுத்து ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக துபாயில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தின் போது மிட்செல் ஸ்டார்க்கிற்கு முன்னதாக அதிகபட்சமாக ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் படைத்தார். ஆனால், அதன் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.21.75 கோடிக்கு ஏலம் எடுத்து அந்த சாதனையை முறியடித்தது.

மேலும், பேட் கம்மின்ஸை 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக அறிவித்தது. கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியானது 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்து புதிய சரித்திரம் படைத்தது. அதிலும் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிராக முறையே 287/3, 277/3 மற்றும் 266/7 ரன்களை குவித்து சாதனை படைத்தது.

இதற்கு முன்னதாக ஹைதராபாத் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 231 ரன்கள் மட்டுமே. இது 2019 ஆம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிராக எடுத்தது. இந்த நிலையில் தான் இதே போன்று தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக முதல் முறையாக டிராபி வென்று கொடுத்த ஃபாப் டூ ப்ளெசிஸை பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாப் டூப்ளெசிஸ் இடம் பெறவில்லை. அப்படியிருக்கும் போது அவர் கண்டிப்பாக ஆர்சிபிலியிருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி ஆர்சிபியிலிருந்து ஃபாப் டூப்ளெசிஸ் வெளியேற்றப்படும் பட்சத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணியானது தங்களது பக்கம் ஏலத்தில் எடுத்து கேப்டன் பொறுப்பு கொடுக்கும். ஏனென்றால், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் தங்களது துணை அணியான செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக முதல் முறையாக டிராபி வென்று கொடுத்திருக்கிறார்.

அவர் மீது நம்பிக்கை கொண்டு பஞ்சாப் கிங்ஸ் அவரை அதிகபட்சமாக ரூ.18 கோடி வரையில் ஏலத்தில் எடுத்து தங்களது அணிக்காக விளையாட வைக்கும். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியானது ரோகித் சர்மாவை விடுவித்தால் அவரை ஆர்சிபி ஏலத்தில் எடுத்து கேப்டன் பொறுப்பு கொடுக்கும். மற்றபடி உள்ள அணிகளில் எந்த மாற்றமும் இருக்காது.

ஏனென்றால் சிஎஸ்கேயில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், லக்னோ அணியில் கேஎல் ராகுல், டெல்லி அணியில் ரிஷப் பண்ட் கேப்டனாகவும், கேகேஆர் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், குஜராத் அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும் இருக்கின்றனர். அதோடு ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் கேப்டனாக இருக்கிறார்.

ஆகையால், இந்த அணிகளைத் தவிர ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மட்டுமே 17 ஆண்டுகளாக டிராபிக்காக போராடி வந்துள்ளன. இந்த 18ஆவது ஆண்டு ஐபிஎல் சீசனில் இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒன்று டிராபியை கைப்பற்ற அந்த அணிகளின் கேப்டன்கள் மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால், ஆர்சிபிக்கு ரோகித் சர்மாவும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஃபாப் டூப்ளெசிஸ் கேப்டனாகவும் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் ஃபாப் டூ ப்ளெசிஸ் இதுவரையில் 145 போட்டிகளில் விளையாடி 37 அரைசதங்கள் உள்பட 4571 ரன்கள் எடுத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு முதல் ஆர்சிபி அணியில் இடம் பெற்றுள்ள ஃபாப் டூப்ளெசிஸ் ரூ.7 கோடிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னதாக ஆர்சிபி அவரை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2024 ஐபிஎல் தொடரில் விளையாடிய 15 போட்டிகளில் 4 அரைசதங்கள் உள்பட 438 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS