அக்டோபர் 09-
Pooja Hegde Salary: தளபதி 69 படத்தில் விஜய்யுடன் 2ஆவது முறையாக இணைந்த பூஜா ஹெக்டே, பீஸ்ட் படத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Pooja Hegde Thalapthy 69 Movie Salary: விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்கு நடிகை பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், மக்களுக்காக அரசியலில் கால் பதித்துள்ளார். அரசியலுக்கு வருவதைத் தொடர்ந்து இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறியிருந்தார்.

ஆதலால், ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது எல்லா படங்களும் முடிந்த நிலையில் கடைசி படமான தளபதி 69 படத்தில் தற்போது நடித்து வருகிறார். அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை ஹிட் கொடுத்த மாஸ் இயக்குநர் ஹெச் வினோத் தளபதி 69 படத்தை இயக்கி வருகிறார். கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

கடந்த 4ஆம் தேதி தளபதி 69 படத்திற்கு பூஜை போடப்பட்டது. 5ஆம் தேதி முதல் படடப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக படக்குழுவினர் கேரளாவில் பையனூரில் முகாமிட்டுள்ளனர். மேலும் இந்த பாடலானது ஒன் லாஸ்ட் சாங் என்ற அடைமொழியுடன் உருவாவதாகவும், இந்தப் பாடலுக்காக கிட்டத்தட்ட 500 டான்ஸ் கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சேகர் மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்து கொடுக்கிறார். அதோடு, இந்த பாடலுக்கு அசல் கோலார் பாடல் வரிகள் அமைத்து கொடுத்துள்ளதாகவும், விஜய் தனது சொந்த குரலில் பாடுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே இந்த பாடலானது குத்துப்பாடலாக உருவாவதாக எங்களது ஏசியாநெட் தமிழ் நியூஸ் வெப்சைட்டில் சினிமா செய்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்திற்காக விஜய்க்கு ரூ.275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வாங்கும் சம்பளத்தை விட அதிகம். இந்த நிலையில் தான் பூஜா ஹெக்டே சம்பளம் குறித்து தகவல் வெளியாகியிருந்தது. விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு ரூ.3.5 கோடி சம்பளம் பெற்றிருந்த பூஜா ஹெக்டே தளபதி 69 படத்திற்கு ரூ.6 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜீவா நடித்த முகமூடி படத்தின் மூலமாக ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டேவிற்கு இந்தப் படம் தோல்வி படமாக இருந்தது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவிலும் நடித்தார். இந்தப் படத்தில் அவரது ரோல் சரிவர பேசப்படவில்லை என்றாலும், தற்போது 2ஆவது முறையாக விஜய் உடன் இணைந்து நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு தனது சம்பளத்தை ரூ.6 கோடியாக உயர்த்தியுள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிப்பில் உருவாகி வரும் சூர்யாவின் 44 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
விஜய் படத்திற்கு மட்டும் சம்பளத்தை கூட்டி கொண்டுள்ளார். மற்ற நடிகர்களின் படங்களுக்கு ரூ.5 கோடிக்கும் குறைவாகவே சம்பளம் பெறும் பூஜா ஹெக்டே விஜய் படத்திற்கு ரூ.5 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 69 படத்தில் விஜய் உடன் இணைந்து பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி, நரைன், பிரகாஷ் ராஜ், மோனிஷா பிளெஸி ஆகியோர் நடிக்கின்றனர். வரும் 2025 ஆம் ஆண்டு இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ படத்திற்கு பிறகு 5ஆவது படத்தில் விஜய் மற்றும் அனிருத் இருவரும் இணைந்துள்ளனர். ஆனால், வினோத் மற்றும் அனிருத் இணையும் முதல் படம் இது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜனநாயகம் என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கு முன்னதாக, தலைவா, சர்கார், லியோ உள்ளிட்ட படங்களில் அரசியல் குறித்து வசனங்கள், காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.