முன்னாள் சாம்பியன்கள் பங்கேற்கும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் (IML) தொடரானது, முதல் பதிப்பாக நடத்தப்படவிருக்கிறது. இந்தியாவை சச்சின் டெண்டுல்கர் வழிநடத்தவுள்ளார்.
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய ஆறு புகழ்பெற்ற கிரிக்கெட் நாடுகளின் சாம்பியன் வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படவிருக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) தொடரானது வரும்

நவம்பர் மாதம் கிரிக்கெட் உலகை தாக்கவுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன் முதலிய முன்னாள் வீரர்கள் மோதவிருக்கும் பரபரப்பான ஐஎம்எல் டி20 தொடரானது நவம்பர் 17, 2024 முதல் டிசம்பர் 8, 2024 வரை நடைபெறவிருக்கிறது.