ஷா ஆலம், அக்டோபர் 09-
ஷா ஆலாம், செக்ஷன் 31, தாசிக் கோட்டா கெமுனிங் ஏரிப்பூங்காவின் நீர்நிலையில் ஆடவர் ஒருவன் சடலம் மிதப்பது இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
காலை 7.30 மணியளவில் அப்பகுதியில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த பொது மக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அந்த சடலம் மீட்கப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.
நேர்த்தியான உடை அணிந்திருந்த அந்த நபரின் காற்சட்டையில் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லை.
அதேவேளையில் உடலில் காயமோ அல்லது பலவந்தப்படுத்தப்பட்டதற்கான எந்தவொரு தடயமோ இல்லை. சவப்பரிசோதனைக்காக அந்த ஆடவரின் சடலம் ஷா ஆலாம் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.