அந்த சந்தேகப் பேர்வழியின் புகைப்படம் வெளியிடப்படும்

கோலாலம்பூர், அக்டோபர் 09-

கோலாலம்பூர் மாநகரில் நேற்று முன்தினம் கேலனா ஜெய வழித்தடத்திற்கான LRT ரயில் சேவை, நிலைக்குத்துவதற்கு காரணமாக இருந்ததாக நம்பப்படும் அதன் இருப்புப்பாதையில் அத்துமீறி நுழைந்த நபரின் புகைப்படம் பொது மக்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபரை ரகசிய கேமராப் பதிவின் வாயிலாக போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இன்னும் பிடிபடவில்லை என்ற போதிலும் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககப்படுவற்கு ஏதுவாக புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த நபரின் செயலால் கிளானா ஜெயா வழித்தடத்தில் மஸ்ஜித் ஜமேக்-கிற்கும், பங்சாருக்கும் இடையிலான எல்.ஆர்.டி ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS