ஜார்ஜ் டவுன், அக்டோபர் 09-
பினாங்கு மாநிலத்தில் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நீர்ப்பெருக்கு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில வடிக்கால், நீர்ப்பாசன இலாகாவின் இயக்குநர் டத்தோ முகமட் நஸ்ரி யாஸ்மின் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான மலேசிய நிர்ப்பெருக்கு அட்டவணையை அடிப்படையாக கொண்டு, பினாங்கில் இன்னும் ஒன்பது தினங்களில் நீர்ப்பெருக்கு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் அறிகுறியாக அடுத்த சில தினங்களில் அதிக மழையளவு பதிவாகலாம். ஒரு மணி நேரத்தில் பெய்யக்கூடிய கனத்த மழையானது, கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இடர்களை ஏற்படுத்தலாம் என்று அவர் நினைவுறுத்தினார்.