பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 09-
கடமையில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் இருவர், உணவகம் ஒன்றில் அமர்ந்து, புகைப்பிடிக்கும் காட்சியைக் கொண்ட காணொளி வைரலானதைத்தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்டுள்ள போலீஸ்காரர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இரண்டு போலீஸ்காரர்களும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதன் தலைவர் ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் மஸ்லிண்டா என்பவரின் X கணக்கு பதிவிலிருந்து அந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் அது குறித்து தங்களுக்கு தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடமையில் உள்ள போலீஸ்காரர்கள், இவ்வாறு கட்டொழுங்கை மீறுவது குறிப்பாக, புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுட்டுள்ள பகுதிகளில் இவ்வாறு ஒழுக்கக்கேடாக நடந்து கொண்டது குறித்து விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.