கோலாலம்பூர், அக்டோபர் 09-
பிஸ்கட் மற்றும் கேக் வடிவில் தாங்கள் தயாரித்த போதைப் பொருளை, சமூக வலைத்தளங்களின் வாயிலாக விற்பனை செய்யப்படுவதற்கு முன்னதாக அவற்றை பரிசோதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை ஜோகூர் போலீசார் முறியடித்துள்ளனர்.
நேற்று முன்தினம் தொடங்கி, மூன்று தினங்களாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போதைப்பொருள் துடைத் தொழிப்பு பிரிவு மேற்கொண்ட ஐந்து வெவ்வேறு சோதனைகளில் அந்த கும்பல் முறியடிக்கப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் தெரிவித்தார்.
இந்த 5 சோதனைகளும் ஜோகூர்பாரு மஜிடீ / மற்றும் Danga Bay / ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன. இதில் உள்ளூரைச் சேர்ந்த நான்கு ஆடவர்கள், ஒரு பெண் மற்றும் ஓர் அந்நியப் பெண் கைது செய்யப்பபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் காதல் ஜோடியான 33 உள்ளுர் ஆடவரும், 35 அந்நிய நாட்டுப் பெண்ணும் அடங்குவர். இவர்கள் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளனர்.
இந்த 5 சோதனைகளிலும் போதைப்பொருள் உட்பட 3 லட்சத்து 26 ஆயிரத்து 150 வெள்ளி பெறுமானமுள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்ஏசிபி ரவுப் செலமட் விளக்கினார்.