ஜார்ஜ் டவுன், அக்டோபர் 09-
பினாங்கு நில அடையாளத்தை தங்கிய வரலாற்று சிறப்புமிக்க பழங்கால பெர்ரி ஒன்றை, பொது மக்களின் பார்வைக்காக தொல்பொருள்காட்சி சாலையாக மாற்றியமைக்கப்பட்டு, தற்போது கடலில் மிதக்கவிடப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆசியாவிலேயே கடலில் மிதக்கவிடப்படவிருக்கும் முதலாவது தொல்பொருள் காட்சி சாலை என்ற பெருமையைத் தர வல்ல இந்த பழங்கால பெர்ரி, தற்போது கிட்டத்தட்ட மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பெர்ரியின் உடலமைப்பின் கால்பாதி கிட்டத்தட்ட மூழ்கும் இடரில் இருப்பதாக அதனை புகைப்படம் எடுத்துள்ள பயனர், ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த பெர்ரியின் இயந்திரப்பகுதியில் கடல் நீர் நுழைந்து இருப்பதை அதனை சோதனையிட்ட Printhero Merchandise நிறுவனம் உறுதி செய்து இருப்பதாக பினாங்கு துறைமுக ஆணையத்தின் தலைவர் Datuk Yeoh Soon Hin தெரிவித்துள்ளார்.
அந்த பெர்ரி படலில் மூழ்கிவிடாமல் இருக்க, அதனை துறைமுகத்திற்கு அருகில் சேறும் சகதியும் நிறைந்த பகுதிக்கு இழுத்து வரப்படும் நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கினார்.