வெளிப்படையான கருத்துகளை நிராகரிக்க வேண்டும்

வியன்டியான்,அக்டோபர் 09-

ஆசியான் பிராந்தியத்தில் பிரிவிணையை ஏற்படுத்தக்கூடிய வெளிப்படையான கருத்துகளை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

ஆசியான் என்ற உணர்வுடன் உறுப்பு நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுடன் தங்களுக்கு இடையே பிளவுகளையும், பேதங்களையும் ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை முழு வீச்சில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அமைதி, ஒத்துழைப்பு மற்றும் வட்டார பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுப்பு நாடுகள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Laos தலைநகர் Vientiane-வில் இன்று தொடங்கிய 44 ஆவது ஆசியான் மாநாட்டில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS