கோலாலம்பூர், அக்டோபர் 10-
கோலாலம்பூர், செராஸில் உள்ள ஒரு வீட்டில் ஒரு மாதுவுடன் ஒன்றாக இருந்ததாக நம்பப்படும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் தர இணக்கத்துறை கைது செய்துள்ளது.
நேற்று அதிகாலை 1.40 மணியளவில் புக்கிட் அமான் உளவுத்துறையைச் சேர்ந்த போலீஸ் குழு அந்த வீட்டில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்த உயர் போலீஸ் அதிகாரியும், மாதுவும் பிடிபட்டதாக அவ்விலாகாவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மட் தெரிவித்தார்.
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், எவ்வித உறவு தொடர்பும் இல்லாத ஒரு மாதுவுடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.