கோலாலம்பூர், அக்டோபர் 10-
வட கிழக்கு பருவமழை இம்மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் வேளையில் தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்கள் மற்றும் சபாவில் சில பகுதிகளில் சராசரி மழையை விட அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத்துறையான MetMalaysia அறிவித்துள்ளது.
பெர்லிஸ், கெடா, வட பேரா, வட கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் வரும் டிசம்பர் மாதம் வழக்கமான மழையவைவிட கனத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அந்த இலாகா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.