கொள்ளைச் சம்பவத்தில் பணி ஓய்வுப்பெற்ற ஆசிரியர்

அலோர் கஜா ,அக்டோபர் 10-

தனது மகளும், அவரின் காதலனும் வாடிக்கையாளர்களைப் போல் நடித்து நகைக்கடைகளில் நிகழ்த்தி வந்த கொள்ளைச் சம்பவங்களுக்கு பணி ஓய்வுப்பெற்ற பெண் ஆசிரியர் ஒருவர் உடந்தையாக இருந்தது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..

பணி ஓய்வுப்பெற்ற 61 வயதுடைய அந்த பெண் ஆசிரியரின் 26 வயது மகளும், அவரின் காதலனும் கடந்த ஜுலை மாதத்திலிருந்து 7 நகைக்கடைகளில் கொள்ளையிட்டுள்ளனர்.

இதனால் சம்பந்தப்பட்ட நகைக்கடைகளுக்கு 50 ஆயிரம் வெள்ளிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மலாக்கா, ஆலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஸ்ருல் முகமது தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி சிலாங்கூர் போலீசார் பணி ஓய்வுப்பெற்ற அந்த பெண் ஆசிரியரையும், அவரின் மகளையும், காதலனையும் வளைத்துப் பிடித்தது மூலம் அவர்கள் சம்பந்தப்பட்ட இந்த கொள்ளைச் சம்பவங்கள் அம்பலமானதாக அஸ்ருல் முகமது கூறினார்.

அந்த மூவரும் சிலாங்கூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் குறைந்த பட்சம் 7 குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

நகைக்கடையில் பொருத்துள்ள ரகசிய கேமராவில் மூலம் அந்த முன்னாள் ஆசிரியரின் மகள் மற்றும் காதலன் ஆகியோரின் முகங்கள் பதிவானதைத் தொடர்ந்து அவர்கள் சிலாங்கூர் போலீசாரிடம் பிடிபட்டுட்டுள்ளனர்.

கறுப்பு கண்ணாடி அணிந்த நிலையில் முக்காடு போடப்பட்ட அந்தப் பெண், / சம்பந்தப்பட்ட ஆசிரியரின் மகள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

மகளும், அவரின் காதலனும் கொள்ளையடித்து வந்த நகைகளை, வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு , விற்பனை செய்வது அந்த ஆசிரியரின் வேலையாகும்.

மலாக்கா அலோர் காஜாவில் மூன்று நகைக்கடைகளில் அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். மஸ்ஜித் தனா, அலோர் காஜா மற்றும் Pulau Sebang ஆகியவை அந்த மூன்று இடங்களாகும் என்று அஸ்ருல் முகமது குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS