ஐஎஸ்ஐஎஸ் ஆயுத குழுவின் தாக்குதலை முறியடித்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை

இஸ்ரேல் – தலைநகர் டெல் அவிவில் ஐஎஸ்ஐஎஸ் ஆயுத குழுவால் மேற்கொள்ளப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதலை அந்நாட்டு பாதுகாப்பு படை முறியடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டெல் அவிவில் உள்ள வர்த்தகமையம் ஒன்றை இலக்குவைத்தே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பொலிஸார் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு முகமை (ISA) பிரிவு வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகரின் வடக்கே மற்றும் மேற்குக் கரைக்கு அருகாமையில் உள்ள தாயிபே(Tayibe) நகரில் வசித்த ஐந்து பேர் பல வாரங்களாக தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மாத கால இரகசிய விசாரணையின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் ஏனைய மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் தொடர் விசாரணைகளில் குறித்த ஐந்து பெரும் ஐஎஸ்ஐஎஸ் ஆயுத குழு உறுப்பினர்கள் என கண்டறியப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது.

இஸ்ரேல் பொலிஸார்

கைது நடவடிக்கையின் போது இஸ்ரேல் பொலிஸாரால் பகிரப்பட்ட காணொளியில், இராணுவத்தினர் வீட்டினுள் புகுந்து மூன்று பேரை கைது செய்ததைக் காட்டுகிறது.

எனினும் இந்த கைது நடவடிக்கைக்கு ஐஎஸ்ஐஎஸ் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS