கோலாலம்பூர், அக்டோபர் 10-
நாடு எதிர்கொள்ளவிருக்கும் நுண்ணறிவு சவால்களை எதிர்கொள்வதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் சில துறைகளை சேர்ந்த சுமார் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மறு கட்டமைப்பிற்கான திறன் பயிற்சி அளிக்கப்பட வேண்டியுள்ளது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தயாரிப்பு, இலக்கவியல் மற்றும் பசுமை பொருளாதரம் ஆகிய மூன்று முக்கிய துறைகளை சார்ந்த நிலையில் கிட்டத்தட்டட ஆறு லட்சம் திறன்பெற்ற தொழிலாளர்களை தயார் படுத்த வேண்டிய அவசியம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க ஏஜென்சியான TalentCorp மேற்கொண்ட ஆய்வின் வழி இது தெரிவித்துள்ளது. மலேசியாவில் தற்போதைய தொழிலாளர்கள் பெரும்பாலும் தோட்டத்துறை, சேவைத்துறை, சில்லரை வர்த்தகம், உணவு தயாரிப்புத்தறை, உற்பத்தித்துறை உட்பட வழக்கமான தொழில்துறையில் மட்டுமே ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர்.
.
இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறைகளில் காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு மறு கட்டமைப்பிற்கான திறன் பயிற்சியை அளிக்க வேண்டியுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.