இன்று முதல் உலகமெங்கும் ‘வேட்டையன்’ பராக்.. பராக்.. பராக்…!

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகிறது. ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் இதன் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் அடித்த நிலையில், டிரைலரும் பலரும் கவனிக்கும் வகையில் அமைந்தது. இப்படி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கும் வேட்டையன் திரைப்படம், உலகமெங்கும் இன்று வெளியாகிறது.

தமிழ்நாட்டில் காலை 9 மணி சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தைக் காண திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

WATCH OUR LATEST NEWS