மாதுவின் குட்டு அம்பலமானது, போலீசாரிடம் பிடிபட்டார்

மலாக்கா,அக்டோபர் 11-

சட்டவிரோத வட்டி முதலையான Along- கிடம் பெற்ற கடனை அடைப்பதற்காக தாம் கடத்தப்பட்டு விட்டதாக கூறி, 70 ஆயிரம் வெள்ளி பிணைப்பணம் கோரி, கணவரிடமும், பிள்ளைகளிடமும் நாடகமாடிய மாது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான 55 வயது மாது, தனது சொந்த கைப்பேசியைப் பயன்படுத்தி, 22 மகனுக்கு அனுப்பிவைத்துள்ள குறுந்தகவல் மூலம் அந்த மாது நாடகமாடியுள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

மலாக்கா, பெரிங்கிட்- டில் உள்ள பேராங்காடி சென்ற அந்த மாது திரும்பவில்லை. தனது தாயார் காணாதது குறித்து மகன் தேடியுள்ளான். ஆனால், அரை மணி நேரத்தில் தாம் கடத்தப்பட்டதாக அந்த மாது மகனுக்கு அனுப்பிய குருந்தகவல் மூலம் இவ்விவகாரத்தை போலீசார் ஆராயத் தொடங்கினர்.

இதில் அந்த மாது கடத்தப்படவில்லை. பிணைப்பணம் கோரி குடும்பத்தினரிடம் அவர் நாடகமாடியுள்ளார் என்பது கண்டு பிடிக்கப்பட்டதாக Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS