புத்ராஜெயா,அக்டோபர் 11-
ஜோகூர் மாநிலத்தின் வார இறுதி நாள் விடுமுறை அடுத்த ஆண்டு முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஜோகூர் மாநில பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்விக்கழகங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமையை வார இறுதி நாள் விடுமுறையாக கொண்டுள்ள மாநில வரிசையான B குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது.
B குழுவில் கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா, மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பெர்லிஸ்,பினாங்கு, பேரா, சபா, சரவாக் மற்றும் சிலாங்கூர் உள்ளன.
2025 கல்வியாண்டில் B குழுவில் புதியதாக ஜோகூர் சேர்த்துக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.