டிரெய்லர் லோரி, தடம்புரண்டு தீப்பிடித்துக்கொண்டது

குவாந்தன்,அக்டோபர் 11-

நீண்ட டிரெய்லர் லோரி ஒன்று சாலை நடுவே தடம்புரண்டு தீப்பற்றிக்கொண்டதில், காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடியை நோக்கி செல்லும் கெண்டிங் செம்பா சாலையின் 27.8 ஆவது கிலோ மீட்டரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இச்சம்பவம் இன்று மாலை 5.18 மணியளவில் நிகழ்ந்தது. வாகனங்கள் கடக்க முடியாத அளவிற்கு லோரியின் வால்பகுதி, சாலையின் குறுக்கே கிடந்ததால் அப்பகுதியில் சுமார் 2.6 கிலோ மீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் Srperintendan Zaihan முகமட் கஹர் தெரிவித்ததார்.

WATCH OUR LATEST NEWS