புத்ராஜெயா,அக்டோபர் 11-
மாமக் உணவக நடத்துநர்கள், நோய்வாய்ப்பட்ட கோழிகளை குறைந்த விலையிலும், செத்தக் கோழிகளை இலவசமாகவும் வாங்கிச்செல்வதாக கூறி, தாம் அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுவதை மீன் வள இலகாவின் தலைமை இயக்குநர் அட்னான் ஹுசைன் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.
தம்மை மேற்கோள்காட்டி, WhatsApp உட்பட சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் அந்த தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நோய்வாய்ப்பட்ட கோழிகளையும், செத்தக் கோழிகளையும் குறைந்த விலையிலேயோ அல்லது இலவசமாகவோ யாரும் பெற்று செல்வதில்லை. இது உணவு தொடர்புடைய முக்கிய விவகாரம் என்பதால் நம்பத்தகுந்த வட்டாரங்கள் வெளியிடக்கூடிய தகவல்களை மட்டும் நம்பும்படி அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.