பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-
2025 ஆம் ஆண்டில் மலேசியாவிற்குள் அதிகமான இலக்கவியல் முதலீடுகள் வரும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை மலேசியா ஏற்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த வட்டாரத்தில் இலக்கவியல் முதலீடுகளுக்கான ஓர் இலக்காக தன்னை முன்னிறுத்தி கொள்ளக்கூடிய ஒரு நல்ல இடத்தில் மலேசியா இருப்பதாக போபிந்த் சிங் குறிப்பிட்டார்.
தாங்கள் செய்யவிருக்கும் முதலீடுகளில் ஓர் இலக்காக மலேசியாவை உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் தேர்வு செய்துள்ளன.
இதன் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருவதாக கோலாலம்பூரில் Gamuda செயற்கை நுண்ணறிவு Academy- யை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.