SUIS பெட்டியில் தீ, மாது இறந்து கிடந்தார்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-

பெட்டாலிங் ஜெயா, சன்வே டாமன்சாரா -வில் ஒரு அடுக்குமாடி வீட்டில் மின்சார Suis பெட்டி வெடித்து, தீப்பரவியதில் மாது ஒருவர் குளியல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக இன்று காலை 8.38 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப்படை இலாகா உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் தெரிவித்தார்.

சுங்கைபூலோ மற்றும் பெட்டாலிங் ஜெயாவிலிருந்து விரைந்த தீயணைப்பு படையினர், அந்த வீட்டில் பரவியதீயை அணைத்துடன் வீட்டை சோதனையிட்ட போது அந்த 14 ஆவது அடுக்கமாடி வீட்டின் குளியல் அறையில் 31 வயதுடைய மாது இறந்து கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அந்த வீட்டில் மூவர் தங்கியிருந்த வேளையில் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளனர் என்று அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS