கோலாலம்பூர், அக்டோபர் 12-
கம்போடியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தனது மகனின் விடுதலைக்காக மலேசியாவைச் சேர்ந்த கார்த்திகேசு தொடர்ந்து போராடி வருகிறார்.
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கம்போடியாவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் தனது 27 வயது மகனை அங்கிருந்து மீட்பதற்கு ஒரு தொழில்நுட்ப வல்லுநரான கார்த்திகேசு, மனித உரிமைகள் மீதான ஆசியான் அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் உதவியை நாட்டியுள்ளார்.
அந்த ஆணையத்தின் உதவியுடன் இம்முறை தங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என்று கார்த்திகேசு நம்புகிறார்.
கார்த்திகேசுவின் மகன் ஹேமகவின் , கடந்த 2016 ஆம் ஆண்டில் கம்போடியாக தலைநகர் நோம்பெனுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கி, ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி, Hemakavin, கம்போடியா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஹேமகவின் – னுக்கு கம்போடியா நீதிமன்றம் 25 ஆண்டு சிறைத் தண்டனையும் 45 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்துள்ளது.
ஹேமகவின் , கைது செய்யப்படும் போது அவர் பதின்ம வயதுடைய இளைஞர் ஆவார். எனவே அவரின் வயதை கருத்தில் கொண்டு கம்போடியா நாட்டின் அரச மன்னிப்பு கேட்டு மனித உரிமை அமைப்புகளின் உதவியுடன் கார்த்திகேசு போராடி வருகிறார்.