கோலாலம்பூர், அக்டோபர் 13-
மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM ஊழல் விசாரணையில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய அரசியல்வாதியுடன் தொடர்புடைய ஒரு வீட்டில் இருந்து சுமார் 5 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றியுள்ளதாக SPRM வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தை சேமித்து வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அந்த பாதுகாப்பான இல்லம் பயன்படுத்தப்பட்டது வந்து விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரால், தெரியவந்தது.
அடையாளம் தெரியாத நபரால் வழங்கப்பட்ட பணத்தை கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சேமித்து வைக்குமாறு பிரபல அரசியல்வாதி ஒரு தொழிலதிபருக்கு உத்தரவிட்டதாக நம்பப்படுகிறது.
இதையடுத்து நேற்று இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த அரசியல்வாதி தனது அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே இந்தப் பணம் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது