கோலாலம்பூர், அக்டோபர் 13-
ஜிஎஸ்டி-யை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் முன், மலேசியர்களின் வருமானத்தை முதலில் அதிகரிக்க வேண்டும் எனதே தமது இலக்கு என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி மிகவும் வெளிப்படையான மற்றும் திறமையான வரி அமைப்பு என்பதை நீண்ட காலமாக அங்கீகரித்து வருவதாக குறிப்பிட்ட அன்வார், ஜி.எஸ்.டி பணக்காரர்களிடம் மட்டுமல்ல ஏழைகளிடம் விதிக்கப்படுகிறது. எனவே மக்களின் வருமானம் அதிகரத்தால் மட்டுமே அதை கவனத்தில் கொள்ள முடியும் என்று மலேசியாவின் அசோசியேட்டட் சைனீஸ் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி அமைப்பின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் அன்வார் தெரிவித்தார்.
மக்களின் குறைந்த பட்ச வருமானத்தின் அளவு 3,000 ரிங்கிட்டில் இருந்து அல்லது RM4,000 ரிங்கிட் ஆக உயர்த்தப்படுவது உறுதிசெய்யும் பட்சத்தில் இந்தக் கொள்கையை நாம் படிப்படியாக அறிமுகம் செய்யலாம்என்று அன்வார் கூறினார்!
ஜிஎஸ்டியை அமல்படுத்திய நாடுகள் முதலில் தங்கள் வருமானத்தை உயர்த்தின என்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்!