குவாந்தன்,அக்டோபர் 13-
கேமரன் மலை தனா ரத்தாவில் உள்ள perumahan makmur கேமரூன் ஜெயா சந்திப்பிற்கு 50 மீட்டர் முன்பு அமைந்துள்ள,ஜாலான் தெங்கோலோக் பாதையில் நிலச்சரிவு காரணமாக இன்று முதல் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்கும் சாலை மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் இருந்து குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதால், மறு அறிவிப்பு வரும் வரை பாதை மூடப்படும் என கேமரன்மலை பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.
சாலையைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.