போதைப்பொருள் பெரியளவில் கைப்பற்றப்பட்டன

தெலுக் இந்தான், அக்டோபர் 14-

தெலுக் இந்தான் அருகே, லங்காப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் 21.87 கிலோ எடையுள்ள பல்வேறு போதைப்பொருள்களை போலீஸார் கைப்பற்றியதோடு, ஐந்து பேரை கைது செய்தனர்.


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 30 முதல் 47 வயதுடையஅவர்கள், இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் தெரிவித்தார்.


ஆய்வு செய்ததில், ஹெராயின் என சந்தேகிக்கப்படும் பொருள் அடங்கிய நான்கு பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், சுமார் 4.21 கிராம் எடையும், 3.12 கிராம் எடையுள்ள மெத்தாம்பெத்தமைன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நான்கு கூடுதல் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
1.8 கிலோகிராம் எடையுள்ள மெத்தாம்பெத்தமைன் என நம்பப்படும் படிகத் துண்டுகள் அடங்கிய 13 பிளாஸ்டிக் பொதிகளையும் போலீசார் மீட்டனர். கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள்களின் மொத்த மதிப்பு ரிங்கிட் 787,527 ஆகும் என்று அவர் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.


மேலும், இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர், அதன் மொத்த மதிப்பு RM 26,000 வெள்ளியாகும் என்று அவர் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS