சிக் , அக்டோபர் 14-
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பள்ளி
ஒன்றின் பாதுகாவலர் மரம் விழுந்து சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.
இந்த விபத்து கெடா, சிக், கம்புங் பந்தர் ஹிலிர் -ல் நேற்று மாலை நிகழ்ந்தது. 47 வயது முகமட் ரிசால் அஜிஸ் (வயது 47) என்ற அந்த ஆடவர், தஞ்சோங் பெசாரில் நோயிற்றிருக்கும் தன் தாயாரை பார்த்து விட்டு யமஹா ரக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த
விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 5.58 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக சிக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் சுல்கைரி மாட் தஞ்சில் கூறினார்.