குவாந்தன்,அக்டோபர் 14-
தற்போதைய சமநிலையற்ற வானிலை காரணமாக பொழுதுபோக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துமாறு மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) பகாங் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
பகாங் மாநில தீயணைப்பு மற்ரும் தீயணைப்பு இயக்குனர் டத்தோ டாக்டர். வான் முகமது ஜைதி வான் இசா கூறுகையில், தென்மேற்கு பருவமழையிலிருந்து வடகிழக்கு பருவமழைக்கு (எம்டிஎல்) மாறுவது, தொடர் கனமழையை ஏற்படுத்தும் சாத்தியங்கள் இருப்பதினால் லபல்வேறு பேரழிவுகள் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் வலியுறுத்திக் கூறினார்.
பொதுமக்கள் கடல், நீர்வீழ்ச்சி, ஆறு, மலை சார்ந்து தாங்கள் திட்டமிட்டுள்ள அனைத்து பொழுது போக்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பது சிறந்தது என்ற்றும் இப்போது வானிலை மாற்றங்களைக் கணிப்பது கடினமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.