12 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக மூத்த ஆசிரியரைப் போலீஸார் கைது

ஈப்போ , அக்டோபர் 14-

12 வயது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஈப்போ ஆரம்பப் பள்ளியின் மூத்த உதவி ஆசிரியரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். பேராக் காவல்துறைத் தலைவர் அசிசி மாட் அரிஸ் ஊடகங்களிடம் கூறுகையில், இந்த விவகாரம்குறித்து மாணவரின் தாயார் புகார் அளித்ததை அடுத்து 37 வயதுடைய நபர் அக்டோபர் 11 அன்று கைது செய்யப்பட்டார்.

“47 வயதான தாய், தனது மகளை ஆசிரியர் கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டதாகத் தெரிவித்தார்”.

“சந்தேக நபர் தனது மகளுக்கு அநாகரீகமான படங்களை அனுப்பியதாகவும் அவர் கூறினார்,”

எட்டு மாதங்களாகப் பள்ளியில் இருந்த சந்தேக நபர், மாணவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக நம்பப்படுவதாக அஸிஸி மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS